தங்கமீன் பதிப்பகம், தங்கமீன் இணைய இதழ், தங்கமீன் கலை இலக்கிய வட்டம் இணைந்த பயணம்.

2 COMMENTS

  1. தங்கமீன் இணையத்திற்கு என் இதயம் கனிந்த வணக்கமும், வாழ்த்துகளும். தமிழ் மொழி விழாவில் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு எளிமையாகவும், அருமையாகவும் இருந்தது. பல நுால்களின் சில பக்கங்களைப் பார்வையிட்டு பயனடைந்த திருப்தி. கண்ணீருக்கான கதை வெகு சுவாரஸ்யமாக இருந்தது. பணத்தின் தேவை எதற்காக என்பதற்கான ஒரு சொல் விளக்கம் அற்புதம். ஒரு மனிதனை அவமானத்திலிருந்து காப்பாற்றுகின்ற ஆபத்பாந்தவனாக பணம் விளங்குகிறது என்பதற்கு மறுப்பில்லை. ஒரிசாவிலுள்ள பழங்குடியினரிடம் தமிழ் கலாச்சார அடையாளங்கள் காணப்படுகின்றன என்கிற தகவல் நமது பெருமைக்குரியது. மகா இலக்கியமான குறட்பாவிலிருந்து அவர் கொடுத்த துணைக்குறிப்புகள் அருமை. பசி குறித்தும், செரிமாணம் குறித்தும் பேசியது கேட்டவர்கள் மனங்களில் பதியம் இட்டிருக்கும் என்றே நம்புகிறேன். என் இனிய பாலு மணிமாறனுக்கு அன்பு நன்றிகள். தொடரட்டும்.. வெல்லட்டும்.. உமது தமிழ்ப்பணி.

  2. என் இனிய அன்பின் பாலு மணிமாறனுக்கு வணக்கம். தமிழ் விழாவின் சிறப்பு சொற்பொழிவைக் கண்ணுற்றேன். திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழ் இலக்கிய உலகின் ஒரு முக்கியமான பாத்திரம். அவரது எழுத்துக்களை நான் நிறைய வாசித்திருக்கிறேன். குறள் குறித்த விளக்கங்கள் எளிமையாகவும், அருமையாகவும் இருந்தன. பேச்சின் பயணத்தில் துணைக்குறிப்புகளாக சுவையான தகவல்களைத் தந்தது அருமை. பணத்தின் தேவை எதற்கு என்பதற்கான சுருக்கமான விளக்கத்தை ரசித்தேன். ஒரு மனிதனின் மானங்காக்கும் மகத்தான கருவியாக பணம் அமைகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஏடி ஏமன் என்பதற்கான சொல்லாராய்ச்சியில் அதியமான் என்ற கண்டுபிடிப்பை பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் மூலமாக அறிந்த செய்து அருமை. ஒரிசாவின் பழங்குடி மக்களிடம் தமிழ் நாகரிகத்தின் அடையாளம் காணப்படுகிறது என்கிற செய்தி பெருமை தருகிறது. பார்த்தேன். ரசித்தேன். ருசித்தேன். நன்றி இனிய பாலு மணிமாறன். தங்கமீன் இணையத்தின் தமிழ்ப்பணி தொடரட்டும்.. வெல்லட்டும். இதயபூர்வ வாழ்த்துகள்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here