ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகும் நூல்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘சிங்கப்பூர் இலக்கியப் பரிசு’ வழங்கி வருகிறது சிங்கப்பூர் புத்தக மன்றம்.

இவ்வாண்டு இறுதிச் சுற்றுக்குத் தேர்வான புத்தகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வான தமிழ் நூல்கள் அதன் ஆசிரியர்களைப் பற்றிய விவரம் பின்வருமாறு:

புதினம் (Fiction)
1. ஒரு துளி சந்தோஷம் – சித்ரா ரமேஷ்
2. 5.12 – எம்.கே.குமார்
3. நீர்த்திவலைகள் – பிரேமா மகாலிங்கம்

கவிதை (Poem)
1. லீ குவான் இயூ பிள்ளைத்தமிழ் – அ.கி.வரதராஜன் –
2. இராவணனின் சீதை – எம். சேகர்

அ-புதினம் (Non-Fiction)
1. கோ.சாரங்கபாணியும் தமிழ்முரசும்: இன்றைய பார்வை – பால பாஸ்கரன்
2. ஆட்டோகிராப் – சித்ரா ரமேஷ்
3. எழுத்தும் எண்ணமும் – எம். சேகர்

இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களின் ஆசிரியர்களுக்கு நம் வாழ்த்துகள்!

ஒவ்வொரு வருடமும் பல கவிதை நூல்கள் வெளியாகும் தமிழ்க் கவிதைச் சூழலில், இவ்வாண்டு 2 புத்தகங்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி இருப்பது வாசகர்கள், எழுத்தாளர்களுக்கு ஆச்சரியமளிக்கலாம்.

2016ம் ஆண்டு தமிழ்க் கவிதைப் பிரிவில், அ.கி.வரதராஜன், சித்துராஜ் பொன்ராஜ், நா.ஆண்டியப்பன், மலர்விழி இளங்கோவன், சபா முத்து நடராஜன், எம்.சேகர் ஆகிய ஆறு பேருடைய கவிதை நூல்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானது நாம் அறிந்த செய்தி. ஒருவேளை, இவ்வாண்டு கவிஞர்கள் தம் கவிதை நூல்களைப் போட்டிக்கு அனுப்புவதில் சுணக்கம் காட்டியிருக்க வாய்ப்புண்டு. எப்படியாயினும், இறுதிச் சுற்றுக்குத் தேர்வான இரண்டு கவிஞர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

சித்ரா ரமேஷ், எம்.சேகர் ஆகியோர் இரண்டு பிரிவுகளில் தேர்வாகி இருப்பது அவர்களுடைய உழைப்புக்குக் கிடைத்த பலன். அயராது இலக்கியவெளியில் செயல்படும் அவர்கள் இருவருக்கும் நம் வாழ்த்துகள்!

பின்வருவோர் தமிழ்ப் பிரிவுக்கான தேர்வில் நடுவர்களாகப் பணியாற்றியதாகத் தன் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது சிங்கப்பூர் புத்தக மன்றம்.

புதினம்
1. முனைவர் சீதாலட்சுமி
2. கனகலதா
3. எம்.ஏ.நுஹ்மான்

கவிதை
1. க.து.மு.இக்பால்
2. முனைவர் ஏ.ஆர்.சிவகுமாரன்
3. முனைவர் ருத்ரமூர்த்தி சேரன்

அ-புதினம்
1. அழகிய பாண்டியன்
2. முனைவர் வி.அரசு
3. முகம்மது காசிம் ஷானவாஸ்

சிரமமான நடுவர் பணியை மேற்கொண்டுள்ள இவர்களது பார்வையில், யார், யார் என்னென்ன பரிசுக்குரியவர்கள் என்பது 6 ஆகஸ்ட் 2018 அன்று நடக்கும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் தெரியவரும்.

சிங்கப்பூர் இலக்கியப் பரிசு பற்றிய மேல் விவரங்களை சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் பின்வரும் சுட்டியில் தெரிந்து கொள்ளலாம்.

https://bookcouncil.sg/awards/singapore-literature-prize

செய்தி சேகரிப்பில் ஆர்வமுள்ள இளையர். கதை, கவிதைகள் எழுதும் ஆர்வமுள்ளவர்.

2 COMMENTS

  1. தெரியாத தகவல் பலவற்றை தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி

  2. வாழ்த்துகள். மகிழ்ச்சி.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here