என்
காதுகள்கூட
கேட்டிராத குமுறலை
பேஸ்புக் அலறிய பிறகுதான்
என் கணவருக்கு உரைத்தது
எனக்கும் அரசியல் தெரியுமென்று ..

இனி என் ஓட்டை
நானே போடலாம்!

*

கணினிப் பொறியாளர். கவிதையில் மிகுந்த ஆர்வமுடையவர். சமூக அக்கறை மிக்கவர். நிகழ்ச்சிகளைப் பதட்டமின்றி ஒழுங்கு செய்வதில் வல்லவர்.

3 COMMENTS

    • மதிக்குமாரே இப்படிச் சொன்னால் எப்படி? 😊 இது தங்கமீன் கூட்டத்தில் வாசிக்கப்பட்டபோது கைத்தட்டல் பெற்ற கவிதை.

  1. (மீண்டும் என் கருத்து, முன்பு பதிந்தது காணாமல் போனதால்) நச்சென்ற கவிதை. வீட்டுப் பெண்களின் ஓட்டுரிமையை குடும்பத்தலைவர்களே தீர்மானிக்கும் நிலையை சுட்டி, சமூக ஊடகப் பதிவு ஒரு எண்ண வடிகாலாக இருந்து அதன் மூலம் தன் கணவனுக்கு ஒரு விழிப்பை ஏற்படுத்துவதை குறைந்த சொற்களில் பதமாகச் சொல்லும் கவிதை. /உரைத்தது/ உறைத்தது எனும் தொனியிலும் பொருந்தி நிற்பது சிறப்பு. வாழ்த்துகள்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here