மனைவியிடம் பலனற்றுப்போயின
மன்னனின் உள்டப்பிக் கெஞ்சல்கள்
ராமனின் முகம் காணத் தயங்கி
அவனைக் கானகம் ஏகக்
குறுஞ்செய்தியில் பணித்த தசரதன்
முகநூலில் அயோத்தி பக்கத்தை
கருப்பாக்கிப் பதிவிட்ட செய்தியில்
கண்ணீர் விடும் பொம்மைகளைச்
சற்றுக் கூடுதலாய் இட்டுத் தன்
வருத்தம் குறைக்க முயன்றார்
புறப்பட ஆயத்தமான
அண்ணனின் பாதங்களைத் தொட்டபடி
சுயமி எடுத்துக் கொண்டான் பரதன்
நாளை வைரலாகவிருக்கும் புகைப்படத்திற்கு
உருக்கமான பதிவொன்றை – அவன்
தயாரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளை
தன் முகநூல் கணக்கைத்
தற்முகாலிகமாய் முடக்கிய கைகேயிக்கு
ஃபேக் ஐடி குறித்த
ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்கக்கூடும்
கூனி!

*

புதுக்கவிதையிலிருந்து நவீன கவிதைக்கு நகர்ந்துவிட்ட முக்கியமான கவிஞர். திரைப்படப் பாடல் எழுதும் ஆர்வமிக்கவர். தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தில் ‘படித்ததில் பிடித்தது’ அங்கத்தை வழி நடத்துபவர்.

1 COMMENT

  1. இரசிக்க வைக்கும் நவீனப்பார்வை ! அருமை !

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்

Please enter your comment!
Please enter your name here