நாம் அன்றாட வாழ்க்கையில் கைத் தொலைபேசி, மடிக்கணினி, புகைப்படக் கருவி என பல சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் சாதனம் எது? ஏன்? அதன் நன்மை, தீமைகளாக நீங்கள் அறிந்தது என்ன? என்பதைப் பற்றி ஒரு கட்டுரையை எழுதி எங்களோடு பகிருங்கள்.

இது கொடுக்கப்பட்ட கரு. இதற்கு மாணவர்கள் எழுதிய கட்டுரைகள் ..

*

இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞான வளர்ச்சி என்பது அசுர வேகத்தில் வளர்ந்ததுள்ளது. அதன் பயனாகத்தான் இன்றைய விஞ்ஞான உலகமே உருவாகிவருகிறது. பலவிதமான சாதனங்கள் இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நான் அதிகமாக பயன்படுத்துவது கைதொலைபேசியாகும். இந்த கைதொலைபேசி தான் இன்றைய உலகையே ஆள்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது. கைதொலைபேசி என் வாழ்க்கையையே சுலபமாக்கிவிட்டது. இவற்றில் இல்லாத பயன்பாடுகளே இல்லை எனலாம். மேலும் இவற்றின் மூலம் இருந்த இடத்தில் இருந்துகொண்டே பல எண்ணற்ற செயல்களில் ஈடுபடமுடிகிறது. அதுமட்டுமல்லாமல் அவசரமான நேரத்தில் மற்றவர்களுடன் விரைவாகத் தொடர்புகொள்ள முடிகிறது. கல்விசார்ந்த சந்தேகங்கள் ஏற்பட்டால் இணையத்தில் உள்ள தகவல்களைப் படித்தோ அல்லது வல்லுனர்களிடம் கேட்டோ தெரிந்துகொள்ளமுடிகிறது. நமது கைக்குள் புதையல் போல் கொட்டிக்கிடக்கும் உலக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதால் நாம் கிணற்று தவளைப்போல இருப்பதில்லை.

கைதொலைபேசி ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவும் விளங்குகிறது. இது உருவாகி பல ஆண்டுகள் கூடாகாத நிலையில் அதன் ஆற்றல் பல மடங்கு பெருகி பல நன்மைகளை விளைவிக்கிறது. நன்மையொன்று ஏற்பட்டால் தீமையொன்று தோன்றுவது இயற்கையன்றோ? அதுபோல தான் கைதொலைபேசியில் பல தீமைகளும் இருக்கிறது. இங்கு கிடைக்கும் செய்திகள் அனைத்தும் உண்மையானதா? இதில் மக்கள் பலரும் பல தகவல்களைப் பரிமாறுகிறார்கள் அது சில நேரங்களில் அவர்களது கருத்துகளாக இருக்கலாமே தவிர உண்மையாக இருக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.

சிலர் தொலைபேசியைப் பயன்படுத்தி பல வதந்திகளைப் பரப்புகிறார்கள். இதனால் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற தீமைகளுக்கும் தொலைபேசி இடங்கொடுக்கிறது. கத்தியை காய்கறி வெட்டவும் பயன்படுத்தலாம் கொலை செய்யவும் பயன்படுத்தலாம். இதுபோல கைதொலைபேசியை எப்படி பயன்படுத்துவது என்பது ஒவ்வொருவரின் கையில் உள்ளது. அப்போதுதான் கைதொலைபேசியின் வளர்ச்சியை பிற்கால தலைமுறையினரும் அனுபவிக்க முடியும்.

தீ. அமிர்தா
ஜூரோங் உயர்நிலைப் பள்ளி

*

இப்போதெல்லாம்,தொலைபேசி நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது நமக்கு பல நன்மைகளைத் தருகிறது, ஆனால் சில குறைபாடுகள் உள்ளன.

பொதுவாக, தொலைபேசி நிச்சயமாக நிறைய நன்மைகள் கொண்டு வரும். முதலில், தொலைபேசி நம் அன்றாட வாழ்வில் மிக விரைவான தகவல்தொடர்பு கருவியாகக் கருதப்படுகிறது, எங்களது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தொடர்புகொள்வது அல்லது செய்திகளை எங்கு வேண்டுமானாலும் எளிதாகத் தொடர்பு கொள்ளலாம். இரண்டாவதாக,தொலைபேசி என்பது மக்களுக்குப் பொழுதுபோக்கிற்கான வழிமுறையாகும். நாம் இசை கேட்க மற்றும் தொலைபேசியில் விளையாடலாம். மேலும், ஸ்மார்ட்போன்களுக்கு சமீபத்திய பயன்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், திரைப்படத்தைப் பார்ப்பதற்கு இணையத்தில் அணுகலாம், இறுதியில் நாம் கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால், நம் ஆய்வு அகராதி போன்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இணையத்தில் பல ஆதார நூல்களைக் கண்டுபிடிக்க இது பயனுள்ளதாக இருக்கும் இது ஆய்வு.

மறுபுறம், தொலைபேசி கூடப் பல தீமை. முதலாவதாக, தொலைபேசி பயனர்கள் தங்களின்தொலைபேசியை சார்ந்து இருக்கிறார்கள் என்றால், அதைப் பொறுத்து, தொலைபேசியில் இன்னும் சில சந்தர்ப்பங்களில் வர்க்க சந்திப்புகள், பஸ்சில், பூங்காவில், இன்னும் அதிகமாக இருந்தால், மனிதத் தொடர்புக்கான திறன் குறைவாக இருக்கும் … சிலர் தொடர்பு கொள்ளாமல் தங்கள் தொலைபேசியில் கவனம் செலுத்துகிறார்கள். தொலைபேசியை பயன்படுத்துவது மக்களுக்கு நிறைய நேரத்தை எடுத்துச்செல்கிறது. ஆய்வின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவது மட்டுமல்லாமல், மாணவர்கள் திசைதிருப்பப்படுவதையும், ஆனால் இது கண்கள்பற்றிய நோய்க்குக் காரணமாகும். கடைசியாக, நாம் வாகனம் ஓட்டும்போது தொலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது, ஏனென்றால் அது போக்குவரத்து விபத்துக்களை ஏற்படுத்தும்.

முடிவில், இன்றைய நவீன வாழ்க்கையில் தொலைபேசி அவசியம். எவ்வாறாயினும் அது எமது வழிகளைப் பொறுத்து உதவுவது அல்லது உதவாது. அது உண்மையான நோக்கத்திற்காகவும் பொருத்தமான நேரத்திலும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.

ரபீக் முகமது லுபிஃனா ஜோஹார்
செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப்பள்ளி

*

இன்று நம் அன்றாட வாழ்க்கையில் எங்கு திரும்பினாலும் தொழில்நுட்பம்.. ஒரு குழந்தை பிறப்பது முதல் இறப்பது வரை அதன் வாழ்க்கையில் தொழில்நுட்பம் இன்றிமையாத ஒன்றாக திகழ்கிறது. உயிர் காப்பதும் தொழில்நுட்பமே, அதை கெடுப்பதும் தொழில்நுட்பமே. நமது வாழ்க்கையில் இந்த அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தின் உண்மையான அர்த்தம்தான் என்ன?

தொழில் நுட்பம் என்பது, பொருட்கள் அல்லது சேவைகள் உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பு. கைத்தொலைப்பேசி தொழில்நுட்பத்தின் ஒரு முக்கியமான அம்சம். அது அவ்வாறு அழைக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம், 1876 ஆம் ஆண்டு மார்ச் பத்தாம் தேதி அலெக்சாண்டர் கிரகாம் பெல் கண்டுபிடித்த தொலைப்பேசியும் இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் திறன்பேசிகளும் முற்றிலும் வேறுபட்டவையாகும் என்பதுதான். அன்று கண்டுபிடிக்கப்பட்ட தொலைப்பேசி இரு நபர்கள் மட்டுமே பேச வழிவகுத்தது. ஆனால் இன்றோ நிலைமை முற்றிலும் வேறுபட்டது. தொலைவிலிருக்கும் நமது நண்பர்களையும் உறவினர்களையும் காண நாம் அங்கு இருக்கவேண்டும் என்று அவசியமல்ல. திறன்பேசிகளில் முகம் பார்த்து பேசும் செயலிகள் பல இன்றைய தொழில்நுட்ப உலகை ஆட்சிசெய்துகொண்டிருக்கின்றன. இது போதாது, தொழில்னநுட்பத்தில் மேலும் வளர்ச்சி காண வேண்டும் என்று துடிப்புடன் செயல்படுபவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றார்கள். வர்த்தகம், அறிவியல், பொறியியல், ஆய்வு, கல்வி, கண்டுபிடிப்புகள், வடிவமைப்புகள், கட்டுமானம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் தொழில்நுட்பம் வெகுவாக பயன்படுத்தப்படுகின்றன. 2050க்குள் இந்த பட்டியல் விரிவடையும் என்பது வல்லுனர்களின் கணிப்பு.

இன்று தொழில்நுட்பம் நமது பரந்த உலகை சிறியதாக்க்யிருக்கின்றது என்று கூறினால் மிகையாகாது. பிப்ரவரி 2004இல் மார்க் சக்கர்பெர்க் ஃபேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளத்தை உருவாக்கினார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். அவரது பெயர் தொழில்நுட்ப உலகில் பொறிக்கப்பட்டுள்ளது அவ்வளவு சுலபமாக நடந்த நிகழ்வல்ல. ஃபேஸ்புக் உருவாக்கப்படும்போது மார்க் சக்கர்பெர்க்கின்மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் பயின்றுகொண்டிருந்த பல்கலைக்கழகத்தில் கணினிகளின் பாதுகாப்பை உடைத்ததற்காகவும், பதிப்புரிமையை மீறியதற்காகவும், ஒரு தனி மனிதனின் அந்தரங்கத்தை மீறியதற்காகவும் அவர் படித்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார். ஆனால் அதோடு அவரது வாழ்க்கை முடிந்துவிடவில்லை. அவர் ஃபேஸ்புக்கை ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே அவரது பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த பாதிக்கும் மேற்பட்ட இளங்கலை மாணவர்களுக்கு மத்தியில் பிரபலமானது. பின்னர், அவர் அந்த வலைத்தளத்தை இதர மூன்று பல்கலைக்கழகங்களில் விரிவுபடுத்தினார். 2000இல் இருந்து இணையத்தள உலகம் என்று அழைக்கப்படும் நம் உலகத்தில் அவரது கண்டுபிடிப்பு நான்கே ஆண்டுகளில் பிரபலமனது. அன்று ஆரம்பித்தது அவர் காட்டில் மழை. இன்று, ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம், வாட்சப் என்ற இதர இரண்டு நிறுவனங்களையும் தன்வசம் கொண்டுள்ளது. இதற்கு காரணம் மார்க்கின் உழைப்பு மட்டுமல்ல. தொழில்நுட்பம் அவருக்கு பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்த பெருமையைத் தேடித்தந்தது. அந்த பெருமையே காலப்போக்கில் பணமாக மாறி இப்பொழுது தொழில்நுட்ப உலகில் அவரை ஒரு பெரிய புள்ளியாக சித்தரிக்கின்றது. பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு தன் லட்சியத்தைத் தேடிச்சென்ற மார்க்கின் வாழ்க்கையைவிட தொழில்நுட்பம் மனிதனுக்கு சாதகமே என்று எடுத்துக்கூற வேறு நல்ல உதாரணம் வேண்டுமா என்ன?

இதுபோன்று பற்பல நன்மைகளை நமக்கு செய்திருக்கும் தொழில்நுட்பம், பல தீங்குகளையும் விளைவித்திருக்கின்றது. ஒரு நாணயத்திலிருக்கும் இரண்டு பக்கங்களைப்போல தொழில்நுட்பத்திற்கும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் இக்காலக்கட்டத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது என்னவோ நமது மாணவச் சமுதாயம்தான். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, மாணவர்களின் படிப்புக்கு இது சில சமயங்களில் பெரிய தடையாக உள்ளது என்று வெளிப்படையாக கூறலாம். மாணவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் திறன்பேசிகள் ஒருவருக்கு ஒருவர் பேசுவதற்கு மட்டும் வடிவமைக்கப்பட்டது அல்ல என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இக்காலத்தில் வாட்சப், ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம், டுவிட்டர் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உருவாக்கப்பட்டும் இருக்கின்றன. இவற்றில் சில படிப்புக்கு தேவையற்றவை. நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் நம் அன்றாட வாழ்வில் நடக்கும் விஷயங்களைப்பற்றி பகிர்ந்துக்கொள்ளவே இந்த செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் வருத்ததிற்குரிய விஷயம் என்னவென்றால் மாணவர்கள் தாங்கள் கவனத்தை செலுத்தவேண்டிய விஷயங்களை விட்டுவிட்டு கைத்தொலைப்பேசியே கதி என்று இருக்கின்றனர். இப்பழக்கத்தை மாற்ற வீடுகளில் பெற்றோரும் பள்ளிகளில் ஆசிரியர்களும் படாத பாடுபடுகின்றனர். இருந்தும், முடிவேயில்லா விளையாட்டுகளில் சில மாணவர்கள் மூழ்கியேவிட்டனர். அவர்களின் முயற்சி பெரிதாக ஒன்றும் பயனளிக்கவில்லை என்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் வருகிறோம்.

இரண்டாவதாக, மாணவர்கள் அன்றாடம் பார்த்துப் பேசும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகின்றது. உதாரணத்திற்கு, 10 வருடங்களுக்கு முன்னால் நாம் எதாவது வேண்டும் என்றால் கடைக்கு சென்று வரிசையில் நின்று பொருட்களை பெற்றுக்கொள்வோம். ஆனால் இன்றோ நிலைமை முற்றிலும் வேறு. அடுக்குமாடி கட்டடஙளின் அடித்தளத்திலும், பள்ளிகளிலும், வேலையிடங்களிலும் கடைத்தொகுதிகளிலும் பொருட்கள் இயந்திரங்கள் மூலமாக விற்கப்படுகின்றன. இதனால் வசதியிருப்பது என்னமோ உண்மைதான். ஆனால் பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு என்றே கூறவேண்டும். காலம் செல்ல செல்ல கடைகள் முற்றிலுமாக இயந்திரங்களாக மாறலாம். இதனால் வேலைவாய்ப்புகள் குறையலாம்.

இறுதியாக, மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வலிமை உள்ளதாகவும் தொழில்நுட்பம் இருக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து கதிர்வீச்சு வெளியேற்றப்படுகின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அவற்றின் பேட்டரி நிலை மிகக் குறைவாக இருக்கும்போது இந்த ஆபத்து பல மடங்கு உயர்கிறது. இதனால் மனித மூளைக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. எந்நேரமும் எதாவது ஒரு ஒளித்திரையை உற்று நோக்கியபடி இருந்தால் பார்வையில் கோளாறு ஏற்படுகின்றது. எப்போதும் காதில் ஒரு கருவியை நுழைத்துக்கொண்டு உரத்த ஒலியைக் கேட்டுக்கொண்டிருப்பதால் காது சிறிது சிறிதாக கேட்கும் திறனை இழக்கிறது. சாலையில் வாகனம் ஓட்டும்போது இவ்வகை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றது. தொழில்நுட்பத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டு அவற்றை சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான முறையில் பயன்படுத்த தெரியாதவர்கள் இவற்றால் பாதிப்படையக்கூடியவர்கள் என்று கூறுவது நிதர்சனமான உண்மை.

தகவல் தொழில்நுட்பம் என்பது இரு புறமும் கூராக்கியக் கத்தியைப் போன்றது. கவனமாகக் கையாளாவிட்டால் உபயோகிப்பவரின் கையைப் பதம் பார்க்கவும் அது தயங்காது என்பதை நாம் உணரவேண்டும். இவ்வகைச் சாதனங்கள் மலிந்துவிட்ட இக்காலக்கட்டத்தில் தாங்கள் பார்ப்பதையும் கேட்பதையும் உண்மையென நம்பிச் சில பேர் பாதை மாறியும் செல்கின்றனர். புழுவுக்கு ஆசைப்பட்டுத் தூண்டிலில் சிக்கித் தவிக்கும் நிலைக்கு நம் மக்கள் ஆளாகிவிடக்கூடாது.

இந்த இருபத்தோறாம் நூற்றாண்டைத் தகவல் தொழில்நுட்பத்தின் பொற்காலம் என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை. இக்காலக்கத்தில்தான் அறிவியலின் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அரியபெரிய கண்டுபிடிப்புகள் அனைவரையும் மூக்கின்மீது விரலைவைக்கும்படி செய்துவிட்டன. இவற்றை ஆக்ககரமான வழியில் மாணவர்கள் பயன்படுத்தினால் அறிவில் சிறந்தவர்கலாக போற்றப்படுவர். இதை நம் மக்கள் நினைவில்கொண்டால் இன்றைய மாணவர்கள் நாளை சரித்திரம் படைக்கும் சாதனையாளர்களாக ஆவர் என்பது மறுக்கமுடியாத உண்மையாக இருக்கும்.

நான் இப்பொழுது ஒரு கைத்தொலைப்பேசியை வைத்திருக்கிறேன். அது என்னுடைய அன்றாட வாழ்வில் பெரிய மாற்றத்தை நல்வழியில் ஏற்படுத்தியுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

பா. ஶ்ரீராம்
கிளமெண்டி டவுன் உயர்நிலைப்பள்ளி

சிங்கப்பூர் உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்காக, தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் ஆதரவோடு நடத்தப்படும் இணையத்தளம்.
www.ilamaithamizh.com

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here