ள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்கிறீர்கள். வழியில் ஒரு 50 வெள்ளி கிடக்கிறது. எடுத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தால், சற்று தொலைவில் ஒரு சீன முதியவரும்,  ஓர் இந்திய ஊழியரும் சென்று கொண்டிருக்கிறார்கள். அது யாருடைய பணமாக இருக்கும் என்று உங்களுக்குள் குழப்பம். அடுத்து நீங்கள் செய்தது என்ன, இறுதியில் அப்பணம் யாரிடம் சேர்ந்தது, அப்பணம் யாருடையது என்பதை எப்படி முடிவு செய்தீர்கள் என்பதைப் பற்றி, உங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி ஒரு கதையை எழுதுங்கள்.

இச்சூழலுக்கு மாணவர்கள் எழுதிய கதைகள் ..

நேர்மையா? பேராசையா? என் மனம் படபடவென்று துடித்துக்கொண்டிருந்தது. ஐம்பது வெள்ளியை இலவசமாக கொடுத்தால், யார் வேண்டாம் என்று மறுப்பார்கள். கீழே, புல் தரையில் ஐம்பது வெள்ளி காசு இருந்தது. நான் அச்சுழநிலையில் சிக்கி இருந்தேன். நான் அந்த பணத்தை எடுக்க துணிந்தான், ஆனால் என மனதில் உள்ள கடமை உணர்வும், நேர்மை உணர்வும் அச்செயலை புரிய, தடுத்தது. மாறாக, நான் அப்பணத்தை கையில் எணுத்துக்கொண்டு அக்கம் பக்கம் பார்த்தேன். சற்று தொலைவில், நான் ஒரு சீன முதியவரையும், ஒரு இந்திய ஊழியரையும் கண்டேன். அந்த ஐம்பது வெள்ளி யாருடையதாக இருக்கும் என்று ஓரே குழப்பமாக இருந்தது.

என்ன வழிதான் இருக்கிறது? காவல் நிலையத்திற்குச் சென்று கொடுத்துவிடலாம். ஆனால், அனைத்து காவலர்களும் நேர்தமையானவர்கள் என்று என்ன உறுதி? தொலைவில் இருக்கும் இரண்டு பேரை அது தங்களுடையதா கேட்கலாம். ஆனால், அவர்கள் உண்மையை கூறாமல், பணத்தை உரிமை கொண்டாடலாம் அள்ளவா? இது போல், எனக்கு பல யோசனைகள் தோன்றியது. நான் ஒன்றை செயல்படுத்தினேன்.

நான் அவ்விருவரின் முன் சென்று, அந்த ஐம்பது வெள்ளி காசை தெரியாமல் கீழே போட்டுவிட்டதுப் போல் நடித்தான். நான் உடனே ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிற்துக் கொண்டேன். நான் கவனித்துப் பார்த்தால், சீன முதியவரோ, அவரால் முடிந்த அளவிற்கு சீக்கிரமாக அந்த பணத்தை நோக்கில் சென்றார். ஆனால், அந்த இந்திய ஊழியர் உடனே தன் பணப்பையை எடுத்துப் பார்த்தார். அவர், தன் பணப்பையில் தன்னுடைய பணம் இருக்கிறதாக என்று பார்த்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். இச்செயலிலே, அந்த பணம், இந்திய ஊழியரது என்று தெரிந்துவிட்டது.

நாம் என்றும் மற்றவரின் பொருள் மீது ஆசைப் படக்கூடாது, பேராசையும் கூடாது.

நிஷாந்தி
கிளமெண்டி டவுன் உயர்நிலைப்பள்ளி

*

அன்று மாலை என் உயர்தமிழ் வகுப்பு முடிந்து சோர்வாகவும் களைப்புடனும் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அப்போது என் காலடியில் ஏதோ! கிடப்பது கண்டு குப்பைத் தொட்டியில் போடக் குனிந்து பார்த்த போது ஒரு பனிக்கூழ் சுற்றிய தாள்களுடன் ஒரு $50 வெள்ளியைக் கண்டு ஒரு உந்துதலில் குப்பைகளுடன் சேர்த்து அந்த $50 வெள்ளியைம் எடுத்து ஒருவிதப் பதட்டத்துடன் நிமிர்ந்த போது சற்றுத்தொலைவில் ஒரு சீன முதியவரும் ஒரு இந்திய ஊழயரும் சென்று கொண்டிருந்தனர். அந்தப் பணத்தை அவர்கள் தான் தவறவிட்டு விட்டனர் என்று எண்ணி வில்லிருந்து புறப்பட்ட அம்பு போல மின்னல் வேகத்துடன் சென்று அவர்களிடம் $50 காட்டினேன். அவர்கள் மறுத்துவிட்டு சென்றனர்… ஆனால் என்ன? செய்து என்று யோசித்தபோது தான் என் முன்னால் சற்றுத்தொலைவில் ஒரு சீன மூதாட்டி பழையை அட்டைப் பெட்டிகளை ஏற்றிய வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தார் … எனக்கு ஒருயோசனை தோன்றியது உடனே அந்தப் பணத்தை கீழே போட்டு விட்டு பார்க்காதது போல நின்றேன். அந்த மூதாட்டிப் பணத்தை எடுத்துக் கொண்டு என்னிடம் ஏதோ? சீனமொழியில் கேட்டார் எனக்குப் புரியவில்லை ஆனாலும் பணத்தைப் பற்றித்தான் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு என்னது இல்லை எனச் சைகை காட்டினேன். ஆனால் அந்தப் பாட்டி சிறு புன்னகையுடன், ஓரமாக வண்டியை விட்டுவிட்டு ரயில் நிலைய மேடை நோக்கி நடந்தார்.. நானும் ஆர்வத்துடனும் ஒரு குழப்பத்துடனும் சற்று இடம்விட்டு பின் தொடந்தேன். அவர் அங்கிருந்த நிதிதிரட்டுப் பெட்டியில் போட்டுவிட்டு வண்டியை நிறுத்திய இடத்திற்குச் சென்றார்.

அன்றிலிருந்த கற்றுக்கொண்டேன்… பிறர் பொருளை எங்கேனும் கண்டால் உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் பொதுநலனுக்கு உதவும் நிதிதிரட்டுப் பெட்டியில் போடவேண்டும்..இதை என் தோழிகளிடமும் தெரிவித்து மனநிறைவு கொண்டேன்.

ஸ்ரீதுர்கா சண்முகநாதன்
யுவான் சிங் உயர்நிலைப்பள்ளி

*

அன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நேரம், கதிரவனின் ஒளிகீற்று தகதக என்று மன்னியது. நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன். மனது மகிழ்ச்சியில் கரைபுரண்டு ஒடியது. அதற்கு காரணம் என் பிறந்தநாள் அன்று, அதுவும் இம்முறை வார இறுதி நாட்களில் வருகிறது. என் அப்பா என் பிறந்தநாள் பரிசாக நூறு வெள்ளி நோட்டை அன்பளிப்பாக முன்கூட்டியே கொடுத்து, அம்மாவுடன் சென்று வேண்டிய பொருளை வாங்கிக் கொள்ள சொன்னார்.

எனவே இரட்டிப்பு மகிழ்ச்சியில் ‘என்ன வாங்கலாம்?’ என்று யோசித்தப்படி ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலை முணுமுணுத்தப்படி நடந்து செல்லும்போது என் காலில் ஏதோ தட்டுப்பட்டது. ‘ஆகா! என்ன ஆச்சரியம்!’ கீழே ஐம்பது வெள்ளி நோட்டு ஒன்று கிடந்தது.

எனக்கு கடவுளும் பிறந்தநாள் பரிசு கொடுதத்துவிட்டார் என்று மனதிற்குள் எண்ணியவாறு அதை எடுத்து ‘இதில் என்ன வாங்கலாம்?’ என்று யோசிக்க தொடங்கினேன். அடுத்த நொடியே நான் நினைப்பது தவறு என்று என் மனம் கூறியது. கூடவே என் ஆசிரியர் சொல்லிக் கொடுத்த,
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வோம் எனல்
என்னும் திருக்குறளும். அடுத்தவர் பொருளை நாம் எடுக்க நினைததாலே தீமையுண்டாகும் என்னும் அதன் கருத்தும் நினைவுக்கு வந்தது.

நோட்டை கையில் வைத்துக்கொண்டு சுற்றும் முற்றும் கண்ணைச் சுழலவிட்டேன். எனக்கு சற்று தொலைவில் ஒரு இந்திய ஊழியரும், ஒரு சீன முதியவரும் சென்று கொண்டிருந்தனர். இவர்களில் யாரோ ஒருவர்தான் பணத்தை தவற விட்டு இருக்கவேண்டும் என்று எண்ணியவாறு அவர்களை நோக்கி நடந்தேன்.

ஆனால் மனதிற்குள் குழப்பம் பணம் யாருடையது என்பதை எவ்வாறு கண்டறிவது? நேரடியாக கேட்டால், இருவரும் தங்களுடையது என்றால் என் செய்வது? என்று எண்ணியபடி நடந்த எனக்கு அப்பா கொடுத்த நூறுவெள்ளி பணம் என்னுடைய பையில் இருப்பது நினைவுக்கு வர யோசனை தட்டுப்பட்டது.
அவர்களின் அருகில் சென்றதும், ‘ஐயா ஒரு நிமிடம்’ என்றதும். இருவருமே நின்று என்னைப் பார்த்தனர். மேலும், நான் அவர்களிடம் ‘ஐயா உங்கள் இருவரில் ஒருவர் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்’ என்று கேட்டவுடன் இந்திய ஊழியர் ‘என்ன வேண்டும் தம்பி?’ என்று கேட்டார். அதற்கு நான் ‘ஐயா! என் பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளார்கள் நான் என் பாட்டிக்கு பள்ளி முடிந்து வரும்போது, பழங்கள் வாங்கி வருவதாக கூறியிருந்தேன். ஆனால், சில்லரை கொண்டு வர மறந்துவிட்டேன். என்னிடம் உள்ள நூறு வெள்ளிக்கு யாராவது ஒருவர் சில்லரைக் கொடுத்து உதவ முடியுமா? என்று கேட்டேன்.

அதற்கு இந்திய ஊழியர் ‘தம்பி என்னிடம் அவ்வளவு தொகை இல்லை, மன்னித்துவிடு’ என்று கூறிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஆனால் சீன முதியவரோ ‘தம்பி, நான் இப்போதுதான் என் மனைவியை மருத்துவமனை அழைத்துச் செல்வதற்காக தானியங்கி இயந்திரத்தில் இருநூறு வெள்ளி பணம் எடுத்து வந்தேன். நான் உன்னுடைய நூறு வெள்ளிக்கு இரண்டு ஐம்பது வெள்ளி நோட்டாகத் தருகிறேன்’ என்று கூறினார்.

பைக்குள் கைவிட்ட அவர் முகம் அதிர்ச்சி அடைந்தது. ‘ஐயா என்னவாயிற்று’ என்று நான் வினவினேன். அதற்கு முதியவர் ‘தம்பி நான் நான்கு ஐம்பது வெள்ளி நோட்டுக்களை வைத்திருந்தேன். இப்போது மூன்றுதான் உள்ளது. ஓன்றைக் காணவில்லை’ என்று பதற்றத்துடன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து தேட ஆரம்பித்தார்.

சற்றுத் தூரம் சென்றதும், இங்கு நான் வந்தப்போது தான் என் தொலைபேசி ஒலிந்தது. பையிலிந்து தொலைபேசியை எடுக்கும்போது, பணத்தை தவற விட்டிருக்கலாம் என்று கூறிவிட்டு தேட ஆரம்பித்தார்.

அப்போது நான் அவரிடம் ‘ஐயா! பதற்றம் வேண்டாம். உங்கள் நோட்டு இந்தச் செடிக்கு அருகில் கிடந்தது. நான் யாருடையது என்பதை அறியவே உங்கள் இருவரிடமும் சில்லறைக் கேட்டேன். இதோ உங்கள் பணம் என்று அவரிடம் கொடுத்தேன்.

பணத்தை பார்த்ததும் பெரியவரின் முகம் நிம்மதி அடைந்தது. மிகவும நன்றி தம்பி’ என்று அவர் என்னிடம் கூறியதுடன் நீ வாழ்க்கையில் வெற்றி பெற என் வாழ்த்துகள் என்று ஆசி கூறிவிட்டு நகர்ந்தார்.

எனக்கு அந்த பிறந்தநாள் மிகவும் மறக்க முடியாத பிறந்தநாளாக அமைந்தது. ‘அறம் செய்ய விரும்பு’ என்னும் ஆத்திசுசூடிக்கு ஏற்ப நான் இன்னும் பல நன்மைகள் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துடன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

விஷ்ணு 
பொங்கோல் உயர்நிலை பள்ளி

*

சிங்கப்பூர் உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்காக, தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் ஆதரவோடு நடத்தப்படும் இணையத்தளம்.
www.ilamaithamizh.com

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here