காலத்தைப் பதிவு செய்பவன் கலைஞன். “நாட்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை” – வண்ணநிலவன். தான் கடந்து செல்லும் காலத்தை தன் கலையில் பதிவு செய்பவன்தான் மெய்யான கலைஞனாகிறான்.

ஓவியன் ஓவியத்திலும், சிற்பி சிற்பத்திலும், இசைஞன் இசையிலும், எழுத்தாளன் எழுத்திலும், சினிமாக்காரன் சினிமாவிலும் அவன் காலத்தை பதிவு செய்கிறான். காலத்தை ஏன் பதிவு செய்திட வேண்டும்? கலைஞன் காலத்தின் கண்ணாடி. ஒருகாலத்தை நீங்கள் பார்க்கவேண்டுமெனில், அந்த காலத்தில் உள்ள கலைஞர்களின் படைப்புகள் மூலம் நீங்கள் அந்த காலத்தை உணரலாம். வரலாறு படிப்பது வெறும் செய்திகள் மட்டுமே.

தமிழ் – இயல், இசை, நாடகம் இவை மூன்றும் சேர்ந்ததே சினிமா.
சிங்கப்பூர், மலேசியா, ஈழம் புலம்பெயர்ந்த தமிழர்கள், கோடம்பாக்கம் கடந்த சினிமா எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் கோடம்பாக்கத்தின் எதோ ஒரு பிம்ப சினிமாவையே மறுஉருவாக்கம் செய்கிறார்கள்.
சுயாதீன சினிமாவிற்கான காலமிது. ஒரு டிஜிட்டல் கேமரா, ஒரு மடிக்கணினி, சொற்பப் பணத்துடன், தீரா சினிமா தாகத்துடன், மிகச்சிறந்த படங்களை உருவாக்க இயலும். எட்டு தோட்டாக்கள், குரங்கு பொம்மை, மாநகரம் போன்ற படங்கள் வெளிநாடுகளில் வெளிச்சத்திற்கு வராமல் உள்ளன. வியாபார ரீதியாக மார்க்கெட் உள்ள நடிகர்களின் படங்கள் மட்டுமே வெளிநாடுகளில் வெளியாகும்.

Online சினிமா (Netflix, Amazon prime) சுயாதீன சினிமாவிற்கொரு நல்ல வாய்ப்பு. ஆனாலும் அதனை யாராவது அடையாளம் காட்ட வேண்டிய சூழல். நல்ல படங்கள் (parallel cinema) பற்றிய அறிமுகம் குறைவு. நல்ல படங்கள் வெளிநாடுகளிலும், online தளத்திலும் வெற்றி பெறுவதன் மூலம் மேலும் பல நல்ல கதைகளும் இயக்குனர்களும் அறிமுகமாவார்கள்.

சிங்கப்பூரில் கனவுத்திரை…! 

சிங்கப்பூரில் தமிழுக்கு நிறைய சங்கங்கள் தமிழுக்கு சீரும் சிறப்பாக தொண்டு செய்து வருகின்றன.  Singapore film society உள்ளது. ஆனால், தமிழ்ச் சினிமாவுக்கென்று இங்கு எந்த சங்கமும் இல்லாதது ஆச்சரியம். சினிமாப் பார்ப்பது எவ்வளவு மகிழ்வோ, அதனைவிட, பார்த்த சினிமாவைக் குறித்துக் கலந்துரையாடுவது பெரும்மகிழ்வு. அந்த கலந்துரையாடலுக்காகத்தான் இந்த – ‘கனவுத்திரை’.

கனவுத்திரையின் மூலம் வரும்காலத்தில் குறும்படங்கள், ஆவணப்படங்கள், முழுநீள திரைப்படங்கள் படைக்கும் எண்ணம் உள்ளது. கனவுத்திரை சினிமா கலைஞர்களுக்கு மட்டுமல்ல, சினிமா ரசிகர்களும். இங்கு உங்களுக்கு பிடித்த படம், பாடல், காட்சி, நடிகர்கள் என்று எது குறித்தும் சினிமா பற்றி கலந்துரையாடலாம்.

தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர்

சிங்கப்பூரில் சிறந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளனர். இவர்கள் உலகத் தமிழர்கள் அறியும் வண்ணம் படங்கள் செய்திட வேண்டும் என்பது என் விருப்பம்.

சிங்கப்பூர் துரைராஜ், AJ, மதியழகன், சூர்யா வேலன், விஷ்ணு, குணசீலன், சத்யா, பாலாஜி சீனிவாசன், நித்யா, பராசக்தி, மலர், சிங்கை ஜெகன், ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை’ மணி, இயக்குநர் முகமது அலி (The media), இயக்குநர் வெங்கா, இயக்குநர் குமரன், இயக்குநர் அலி அப்பாஸ், இயக்குநர் சலீம் ஹைடி, இயக்குநர் அரங்கண்ணல், ஒளிப்பதிவாளர் கோபால், ஒளிப்பதிவாளர் சிவா, படத்தொகுப்பாளர் அருன் பாலாஜி, படத்தொகுப்பாளர் சிவா,  இசையமைப்பாளர் சபீர், இசையமைப்பாளர் ஸ்டீபன் சர்க்காரியா, ” U turn” இசையமைப்பாளர் தேவா, தயாரிப்பாளர்கள் JK சரவணா, அருமை சந்திரன், துவார் சந்திரசேகர், லோகநாதன் கணேசன் என நீளும் பட்டியல் பெரிது. சிலரை மட்டுமே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் பலர் இருக்கிறார்கள். இவர்கள் நினைத்தால், நிச்சயம் சிங்கப்பூரைக் கதைகளமாகக் கொண்டு சிறந்த படங்களை உருவாக்க இயலும். அதன் வழி, சிங்கப்பூர் திரைத்துறை உருவாகும்
                                       FCS Creation ‘தொட்டால் தொடரும்’ திரைப்படக்குழு
அடையமுடியாதது கனவு, 
அடைந்துவிட்டால் அது நினைவு. 

வாருங்கள் கனவுத்திரையை நினைவுத் திரையாக்குவோம்.

*
‘கனவுத்திரை’யின் ஃஃபேஸ்புக் பக்கத்தில் இணைய:
https://www.facebook.com/kanavuthiraisg/

*

சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சினிமோட்டோகிராபி பயின்றவர். ‘கருப்பம்பட்டி’, ‘கத்துக்குட்டி’ போன்ற திரைப்படங்கள் இவருடைய ஒளிப்பதிவில் உருவானவை. பல சர்வதேசத் திரைப்பட விருதுகளை வென்ற TO LET படத்தின் கதாநாயகன். சிங்கப்பூரில் திரைப்படத் திறனாளர்களை ஊக்குவிக்கும் ‘கனவுத்திரை’ என்ற தன்னார்வ அமைப்பை நண்பர்களோடு இணைந்து முன்னெடுக்கிறார்.

3 COMMENTS

  1. பாராட்டுக்கள். தங்கள் முன்னெடுப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  2. சிங்கைத் திரைத்துறை எங்களின் கனவுத் திரைகளை அகற்றிக் கொண்டு நினைவுலகில் உலவிடும் நினைவுத் திரையாய் உருவெடுக்க வேண்டுகிறோம், வளம் மிக்க திறனாளர்களின் வளர்ச்சிக்கு வாழ்த்துகிறோம்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here