எப்படி சுவாசத்திற்கு உயிர்வளியோ(oxygen) அது போல சௌகரிகத்திற்கு இன்று கையடக்கத் தொலைப்பேசி என்று ஆகிவிட்டது. நம் வாழ்க்கையில் நிழலைப்போல கூடவே வரும் ஒரு அம்சமான கையடக்கத் தொலைபேசி இன்று நமக்கு ஆபத்தில் நல்ல நண்பனாகவும் அறிவிலும் சிறந்த ஆசானாகவும் விளங்கி வருகிறது. இருப்பினும் அதை அதீத அளவில் பயன்படுத்தும்போது, நமக்குத் தேவையில்லாத உடல் உபாதைகளைத் தேர்வுக்காலங்களில் வீட்டிற்கு வரக்கூடிய உறவிர்களைப் போல சலசலப்பை ஏற்படுத்திவிடுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.சமீபத்தில் Straits times நாளிதழில் வெளியான ஒரு செய்தியில் ,நம் சிங்கப்பூரர்கள் சுமார் 12 மணி நேரத்தை மின் சாதனங்களிலே கழிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. கைத்தொலைப்பேசி, அட்டை கணினி, மடி கணினி என்றும் தங்களின் நேரத்தை அதில் செலவு செய்பவர்களுக்கு டேக்‌ஸ் கழுத்து (Text neck) என்ற ஒரு நோய் குறைப்பாடு ஏற்படுகிறது.

நம் கழுத்தை 15-60 டிகிரி அமைப்பில் கீழே கூனிந்து கைத்தொலைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்தும்போது நம் கழுத்து பகுதியில் தேவைக்கு மீறிய அழுத்தம் ஏற்பட்டு வலி பிறக்கிறது. இந்தக் குறைபாட்டைத் தான் டேக்‌ஸ் கழுத்து என்று அழைக்கிறார்கள். குறிப்பாக இளையர்கள் இந்தக் குறைப்பாட்டால் சிறு வயதியிலே அவதிப்படுகிறார்கள்.

இந்தக் கழுத்து எலும்பின் அழுத்தம் இளையர்களின் உடல்வளர்ச்சியையும் பாதிக்கின்று என்று எலும்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், நரம்பியல் பிரச்சினைகள், எலும்பு மூட்டு தொடர்பான வியாதிகள், சுவாசப்பைக் குறைபாடு, எலும்பு தேய்வு போன்ற பல உடல் குறைப்பாடுகளைக் கொடுத்து விடுக்கின்றது. இந்த நிலையைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?

  1. பயன்படுத்தும் மின்சாதனங்களைக் கண் அளவிற்கு (eye level) கொண்டு வந்து பயன்படுத்தலாம்.
  2. ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் 10 நிமிடங்கள் இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  3. நாம் மின்சாதனங்களைப் பயன்படுத்தும்போது நேராக அமர்ந்து அதைப் பயன்படுத்த வேண்டும். முதுகை அல்லது கழுத்தைக் குனிந்தோ அல்லது சரிந்தோ அமர்ந்து இருந்தால் வலி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
  4. கழுத்தின் பிறடியின் தசைகளையும் கழுத்தையும் அவ்வப்போது அசையும் பயிற்சிகளை நாம் அளிக்க வேண்டும்.
  5. தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வர வேண்டும்.
  6. நமது தோள்பட்டைக்கும் பயிற்சிகள் கொடுக்க வேண்டும்.
  7. தேவையில்லாமல் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்
  8. தொடர்ந்து வலி ஏற்பட்டால், தயவுசெய்து எலும்பு நிபுணரை அணுகவும்

இன்றைய பரபரப்புமிக்க உலகில் நாம் நம் உடல்நலத்தைப் பற்றி மறந்துவிட கூடாது. குறிப்பாக வளரும் பிள்ளைகளான இளையர்கள் தங்கள் எலும்பு வளர்ச்சியில் சற்றுக் கூடுதலாக அக்கறை காட்ட வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுக்கொள்.

ஆசிரியர். நல்ல கதை சொல்லி. சிங்கப்பூர்த் தமிழ்ச் சூழலுக்கு பங்களிக்கும் தீராத ஆர்வமிக்கவர்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here