மே 21ம் தேதியன்று ‘சன்டெக் கன்வென்ஷன் சென்டர்’ அரங்கில் ‘Infocom Media Development Authority (IMDA)’ சார்பில் நடைபெற்ற ‘SG:DAY’ எனும் கருத்தரங்கம், தொழில் துறையினர் மின்னியல் மாற்றத்துக்கான பயிற்சி விவரங்கள், அரசாங்க உதவித்திட்டங்கள் பற்றிய கொள்கை விளக்க கருத்தரங்குகள் மற்றும் சாலையோர கண்காட்சிகள் நடைபெற்றன.

விழா நிகழ்ச்சியை மாண்புமிகு அமைச்சர் திரு. ஈஸ்வரன் துவக்கி வைத்து உரையாற்றினார். அவர் தமது உரையில், சிங்கப்பூர் அரசாங்கம், தொழில்கள் மின்னியலுக்கான மாற்றம் பெறும் வளர்ச்சிக்கு அளித்துவரும் ஆதரவு மற்றும் நிதி உதவிகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டார். மேலும் பல தரப்பட்ட சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் இதைப்போன்ற ஆதரவுகளோடு வெற்றி பெற்று விளங்குவதையும் தமது உரையில் தெளிவான விளக்கத்துடன் பட்டியலிட்டார். மற்ற தொழில் நிறுவனங்களும் இத்தகைய மின்னியலாக்கத்திற்கான மாற்றம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு தங்கள் தொழிலில் வெற்றிபெற வேண்டுமென்பது அவருடைய வேண்டுகோளாக அமைந்தது.

கருத்தரங்குகளில், மின்னியலாக்கத்துக்கு மாறிய தொழில்துறை சார்ந்தவர்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்த்து கொண்டு மற்றவர்களையும் அத்தகைய முயற்சிக்கு ஊக்குவித்தார்கள். மேலும் இத்தகைய மின்னியலுக்கான தொழில்நுட்பச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் தங்களின் சேவை மற்றும் அதற்கான அரசாங்க உதவித்திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்.

ஆயிரக்கணக்கான தொழில் வல்லுனர்கள், தொழில் சார்ந்த ஆன்றோர்கள் மற்றும் தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கெடுத்து சிறப்பு செய்தனர். சாலையோரக் கண்காட்சிகளும் மற்றும் விளக்க குறிப்புக் கைப்பிரதிகளும்

நிகழ்ச்சியில் பங்கு பெற்றோருக்கு மிக உதவிகரமானதாக இருந்தன. பலதரப்பட்ட மின்னியலாக்கத்திறன் பெறும் பயிற்சி வகுப்புகள் பற்றிய விழிப்புணர்வுகளும் தகவல் தொகுப்புகளும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன.

இங்கு பரிமாறப்பட்ட உணவு வகைகள் மிக ருசியாகவும் தரமானதாகவும் இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி காபி தயாரித்து பரிமாறும் இயந்திரம் அனைவரையும் கவர்ந்தது. இந்த விழா மிக அவசியமானதாகவும் அதிக பயனுள்ளதாகவும் அமைந்ததற்கு விழா ஏற்பாட்டளர்களான IMDA நிறுவனத்தார்களுக்கு நன்றி கூறி கலைந்தது கூட்டம்.

புகைப்படங்கள்: பாலக்கிருஷ்ணன் ராமநாதன்

ACE International என்ற நிறுவனத்தின் உரிமையாளர். தொழில்முனைவர். ஆராய்ச்சி, மேம்பாடு, உருவாக்கத் துறைகளில் ஆலோசகர்.

1 COMMENT

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here