இளையராஜா இசைநிகழ்ச்சி காண்கிறேன்
இசைப்பவன் உடல் பருமன் என்கிறாய்.

நடுஇரவில் தெருவில் நடக்க விரும்பினேன்
நேரம் கெட்ட நேரத்தில் நடக்காதே என்கிறாய்.

நல்ல மழை, நின்று நனையலாம் என்றேன்
நல்ல பெண்ணிற்கு அதுஅழகில்லை என்கிறாய்.

என் பிரியப் படைப்பாளியை பார்க்க விழைந்தேன்
அவரை பார்த்து ஆகப் போவதென்ன என்கிறாய்.

பார்த்து ரசித்து சமைத்து வைத்தேன்
கைவசம் நல்ல தொழிலிருக்கு என்கிறாய்.

பத்து வரியில் அழகாய் கவிதை எழுதினேன்
என்ன இது எனக்கு புரியவில்லை என்கிறாய்.

இயலவில்லை ஏதோ காய்ச்சல் என்கிறேன்
எனக்கும் காய்ச்சல், உடனே மருந்துகொடு என்கிறாய்.

இருபது வருடங்கள் என்னோடே இருக்கிறாய்
இருந்தும் எனக்கு நீயேனோ தொலைதாரம்!

புதிய கவிஞர். நம்பிக்கையளிப்பவர்

1 COMMENT

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here