சிங்கப்பூரில் கடந்த 26 – 28, ஜூன் 2018, தேதிகளில் ConnecTechAsia 2018 கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் Mariana Bay Sands Exhibition and Convention Hall & Suntech City Convention Centre வளாகங்களில் சிறப்புற நடைபெற்றன.

அதில் ஆயிரக்கணக்கான காட்சி அரங்குகளில் பல நாடுகளைச்சேர்ந்த தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களின் இயந்திரங்கள், உதிரி பாகங்கள் மற்றும் சேவைகள் பற்றி வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் காட்சிப்படுத்தியும் எடுத்துரைத்தும் தங்கள் பங்கை சிறப்பாக செய்தனர்.

கண்காட்சி BroadcastAsia, CommunicAsia & NXTAsia எனும் மூன்று தலைப்புகளில் நடத்தப்பட்டது. கருத்தரங்குகளில் துறைசார்ந்த வல்லுநர்கள், ‘தற்கால வளர்ச்சிகள்’ குறித்து சிறப்புரை நிகழ்த்தினர்.

ஒவ்வொரு கருத்தரங்குகளிலும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொண்டு கலந்துரையாடி தங்களுக்குத் தேவையான கருத்துக்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.

கண்காட்சியைக் காண இலவச அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால், பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் வந்து தங்களுக்குத் தேவையான வகையில் பொருட்களை பார்வையிட்டும் அவை சம்பந்தமான தகவல்களை கேட்டுத் தெரிந்துகொண்டும் சென்றனர்.

பல கல்வி நிறுவனங்களிலிருந்தும் மாணவர்களும் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டு, தங்களின் கல்வியறிவுடன் தொழில் சார்ந்த பொது அறிவையும் வளர்த்துக்கொண்டனர். இலவச தகவல் கையேடுகளும், கைப்பிரதிகளும் கண்காட்சியில் மிகுந்த அளவில் விநியோகிக்கப்பட்டன.

அறிவார்ந்த தேசத்திற்கான வளர்ச்சிக்கு சாதகமான தொழில்நுட்பங்கள், உபகரணங்கள், சேவைகள் மற்றும் பயிற்சிகள் பற்றி அதிக அளவிலான தகவல்கள் பயனாளர்களைச் சென்றடைந்தது. சிங்கப்பூரில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது உலக அளவில் சிங்கப்பூரின் தனித்தன்மையை மேம்படுத்துகிறது.

கட்டுரையாளர், தன் நண்பருடன் ..

நமது வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழில் வளர்ச்சியை போட்டித்தன்மை மிக்கதாகவும் உலக அளவில் வெற்றிகரமானதாக கொண்டு செல்லவும் இது மிக்க துணையாக இருக்கும். இத்தகைய வாய்ப்புக்களைத் தொழில் சார்ந்த பயனாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் தங்களின் ஆர்வம் மற்றும் பொதுஅறிவைப் பெருக்கிக்கொள்ளும் வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ACE International என்ற நிறுவனத்தின் உரிமையாளர். தொழில்முனைவர். ஆராய்ச்சி, மேம்பாடு, உருவாக்கத் துறைகளில் ஆலோசகர்.

3 COMMENTS

  1. தெளிவான படைப்பு. முனைவர். பாலகிருஷ்ணன் ராமநாதன் மேலும் எழுதுங்கள்.

  2. முனைவர் எங்களூர் பக்கத்தவர் என்ற pride என்னுள் பெருமிதங் கொள்ளச் செய்கிறது. அவர் தொழில் முனைவு மாபெரும் வெற்றி கண்டு அவருக்கும், அவர் சார்ந்தோர்க்கும், நாடுகளுக்கும்(தாயகத்தை சேர்த்து)வளமும், புகழும் சேர்க்க வாழ்த்துகிறேன்.
    நானறிந்த மின்னிதழ்கள் பொதுவாய் பன்முகத்தன்மை அற்றதாய்தான் கண்டேன் (வாசிப்பு குறைவு). நமது தங்கமீன் மின்னிதழுக்கு பன்முகத்தன்மையின் ஓர் அங்கமாக முனைவர் அளித்துள்ள கட்டுரை என் மனதை பூரிக்க வைக்கிறது. அவருக்கு மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும். இலக்கிய சந்திப்புகளில் முனைவரை எளிமையான casual attire-ல் சந்திக்கும் போதே நிறைகுடமாய் கணித்தேன். அவர்தம் பணிகளின் பாரங்களுக்கிடையேயும் வித்தியாசமான படைப்புகளை வழங்கிட வேண்டுகிறேன்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here