தமிழ்க் கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நடனத் தயாரிப்பு – அகதி (ஓர் அகதியின் அவல நிலை). அப்சரஸ் ஆர்ட்ஸ் டான்ஸ் கம்பெனி, இதை அரங்கேற்ற உள்ளது.

மிக அணுக்கமாக, அகதிகளின் வாழ்க்கை, அவர்களது போராட்டங்களின் நெருக்கமான சித்திரத்தை, இத் தயாரிப்பு நமக்குக் காட்ட இருக்கிறது. வாழ்நாள் நெடுக, நாடிழந்த மக்கள் தூக்கிக் கொண்டலைய வேண்டிய, ‘முத்திரை’ குறித்தும் பேச இருக்கிறது.

அப்சரா ஆர்ட்ஸ் நடனக் கம்பேனியின் கலை இயக்குநரான அர்விந்த் குமாரசாமி, ஓர் அகதியாக, பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்த, சொந்த வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது –  அகதி!

நன்கு அறிமுகமான தமிழ்க் கவிஞர்களான கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், கவியரசு கண்ணதாசன் ஆகியோரது கவிதைகளையும் மகாகவி பாரதியின் கொள்ளுப் பேரர் நிரஞ்சன் பாரதி, ஐ.நா. அகதி முகாம் வெளியிட்ட ‘A Book of Poems: Expressions from our Youth’ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து மொழிபெயர்த்த கவிதைகளையும் கொண்டு, இதற்கான இசைக் கோர்வை தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு புதிய இசை, நடன அனுபவம் நமக்காகக் காத்திருக்கிறது.

Inspiration behind Agathi

Our Agathi Raga Lab has been loved by nearly 40,000 viewers globally! Listen to the Apsaras Arts team share the inspiration behind this unique production. Agathi is now in the UK as part of Milapfest – performing at Manchester today and Liverpool on 17th June. Residents in UK – don't miss the amazing act live! If you missed catching the Agathi Raga Lab (which is a small boat scene excerpt adapted for IndianRaga from the full production), you can watch it here – https://www.facebook.com/indianragasingapore/videos/2048130788779448IndianRaga London

Posted by IndianRaga Singapore on Tuesday, 12 June 2018

Please book your tkts via

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdFpqdYo7mKN6U3dSTIOeA-wwkAEoA95vibnmuEP4ttiOhOcQ/viewform

செய்தி சேகரிப்பில் ஆர்வமுள்ள இளையர். கதை, கவிதைகள் எழுதும் ஆர்வமுள்ளவர்.

1 COMMENT

  1. நல்ல முயற்சி. புலம் பெயர்ந்த காலங்களில் அகதிகளாய் நம்மவர்கள் சகித்த அவலங்களை அறியாத இன்றைய தலைமுறைக்கு சிறந்த அறிமுகமாக இம்முயற்சி அமையுமென நம்புகிறேன். நடன நாடக வடிவில் அர்ப்பணித்து மீள்பார்வைக்கு இட்டுச் செல்லவிருக்கும் அர்விந்த் குமாரசாமி அவர்களால்தான் கடந்து வந்த நாட்களை தத்ரூபமாக தெரிவித்திட இயலும் என நான் நம்புவதால் இது நிச்சயமாக மாபெரும் வெற்றிப் படைப்பாய் இருக்கும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.
    இதன் படைப்பை அனைத்து அங்கங்களிலும் நிறைவாய் அளித்திட துணை நின்ற அனைவருக்கும் எனது பாராட்டுகளும், நல்வாழ்த்துக்களும்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here