பேசிக்கொள்ள எதுவுமே இல்லை
என்பது போன்ற மௌனம்
உரையாடல்களினிடையே
இனம் தெரியாமல் சிக்கி
முன்னும் பின்னும் போகாமல்
நகர விட மறுக்கிறது

பிறர்க்கு இந்த சிரித்த முகம்
போதும் என்பதற்காகவே
ஓரிரு சொற்களுடன்
சம்பிரதாயமாக பேச்சு

விட்டுச் சென்று ஞானியானதால்
பலர் பயனடைந்திருக்கலாம்
மனைவிக்குக் கையறுனிலையே
எப்போதும் ஒரே மாதிரி
எல்லோரிடமும் நடக்க
புத்தனால் கூட முடியவில்லை

என்ன செய்கிறோம் என்பதை
எதற்காக செய்கிறோம் என்பதை வைத்து
சமன் செய்ய வேண்டியிருக்கிறது

சுயரூபம் மென்மையானது
உடைந்து விழுந்து விடக்கூடியது

அதிபல ஆயுதம் ஏந்தி
விளையாடும் குழந்தைபோல
மிகையான ஆபத்தில் இருக்கும் அது
எழுப்பிக்கொண்ட சுயச்சிறைக்குள்
அவ்வப்போது புன்னகைத்து
பத்திரமாக இருப்பதாக
பலமாக நம்பியபடி….

*

தமிழும், படிப்பும், எழுத்தும் இவருக்கு மிகவும் பிடிக்கும். அறிவியல் புனைவுகள் படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் உண்டு. இவருடைய சிறுகதைகளும் கவிதைகளும் பரிசுகள் பெற்றிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here