கவிமாலை நடத்தும் நூல் வெளியீட்டு விழாவில்
திரைப்படப் பாடலாசிரியர்
அறிவுமதி
*

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 10.06.2018 மாலை சரியாக 6.30 மணிக்கு சயது ஆல்வி சாலையில் அமைந்துள்ள ஆனந்தபவன் உணவகத்தின் மேல் தளத்தில் கவிஞர் தங்க வேல்முருகனின் “ நினைப்பதற்கு நேரமில்லை” – எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. இது கவிமாலை ஆதரவில் நடைபெறும் 124ஆவது நூல் வெளியீடு ஆகும்.

விழாவுக்குக் கவிமாலைக் காப்பாளர் மா. அன்பழகன் தலைமை வகிக்க, கவிஞர் லலிதா சுந்தர் நூலாய்வு செய்ய இருக்கிறார். சிறப்பு விருந்தினராக HEC Electrical நிறுவனத்தின் இயக்குநர் திரு & திருமதி ஜான் ஹோங் & ஜெனிபர் ஹோங் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

விழாவின் சிறப்பு நிகழ்வாக திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி தமிழகத்திலிருந்து வருகை புரிந்து சிறப்புரை ஆற்றுவதோடு நூலையும் வெளியீடு செய்கிறார். அத்துடன் தமிழகத்தைச் சார்ந்த பேரா. கவிஞர் சொற்கோ கருணாநிதி முனைவர் இரத்தின புகழேந்தி, எழுத்தாளர் இசாக் ஆகியோர் கலந்துகொண்டு பேச இருக்கிறார்கள். முதல் படியைக் கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் எம். இராசேந்திரன் பெற்றுக்கொள்கிறார்.

அனைவரும் வரலாம். தகவலுக்கு 90053043

தங்கமீன் பதிப்பகம், தங்கமீன் இணைய இதழ், தங்கமீன் கலை இலக்கிய வட்டம் இணைந்த பயணம்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here