சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இன்று மாலை(29-04-2018)
சிங்கைக் கவிஞர்களின் புகழ்போற்றும் கவிமாலையின் கவிதைத் திருவிழா 2018 –

தமிழ்மொழி விழா 2018-இன் நிறைவு விழாவாக இனிதே நடந்தது.

சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா.தினகரன் அவர்கள் நிகழ்வுக்கு தலைமையேற்க..
தமிழகத்திலிருந்து வருகைத் தந்த கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கவியரங்கத்துக்கு தலைமையேற்க
ஆறு பள்ளி மாணவர்கள் “பெட்டிகள் பேசினால்’ எனும் தலைப்பில் வந்தவர்
வியக்கும் வண்ணம் கவியரங்கம் நடத்தினர்.

கவிமாலையின் இவ்வாண்டு சிறந்த நூலுக்கான தங்கப்பதக்க விருது
கவிஞர் சி.கருணாகரசு அரங்கம் அதிரப் பெற்றார்.

இலக்கிய கணையாழி விருது சிங்கப்பூரின் மூத்த கவிஞர் பாத்தூறல் முத்து மாணிக்கம் அவர்களுக்கு நெஞ்ச நெகிழ்வுடன் கொடுக்கப்பட்டது.

இளங்கவிஞர்களுக்கு வழங்கப்படும்
தங்கமுத்திரை விருது கவிஞர் க.பாலமுருகன் அவர்களுக்கு அனைவரின் கையோசையுடன் கொடுக்கப்பட்டது.

இந்த இணைப்பில் படங்களை காணவேண்டுகிறேன்.

https://plus.google.com/u/0/photos/101429787926546951798/album/6551942541798099121?authkey=CK6jveKhvqUg

சிங்கப்பூர் தமிழ் இலக்கியச் சூழலில் நன்கு அறிமுகமான பெயர் – தியாக. இரமேஷ்.. தமிழ் நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்வது, நிகழ்ச்சிகளைப் புகைப்படம் எடுப்பது, அதை இணையம் வழியாகப் பகிர்வது என்று பல வருடங்களாகத் தொடரும் அவருடைய சேவை மதிப்புமிக்கது

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here