ஒளியடைந்த அறையில்
தன் கருங்கதிர்களை
பாய்ச்சி நிரப்புகிறது இருள்.

வெளிச்சத்தின் நிறம் எதுவென
புலப்படாத இடைப்பட்ட பொழுதில்
தூரிகையின் துணையின்றி
தன்னை வரையத் தொடங்குகிறான்
பார்வையற்றவன்.

கோபத்திற்கு ஒன்றும்
எதிர்ப்பிற்கு ஒன்றும்
சமாதானத்திற்கு ஒன்றுமென
கேள்வியுற்ற நிறங்களில்
இல்லாத வெண்காகிதத்தில்
கிளைபரப்பி வளர்கின்றன
ஒவ்வொரு கோடுகளும்.

நிறக்கண்கள் கொண்டு பார்ப்பவர்க்கு
தெரியாமல் போகலாம்
அந்த ஓவியமோ
அந்த அறையோ
அல்லது நானோ?

*

நவீன கவிதைகளின் தளத்தில் தொடர்ந்து பயணிப்பவர் சுபா செந்தில்குமார். பேனா முனை விருது பெற்றவர். சிங்கப்பூருக்கு வெளியிலும் கவனம் பெற்றவர்.

2 COMMENTS

  1. கருங்கதிர் — ஆத்தி

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here